mars

2003ம் ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஐரோப்பிய யூனியனின்மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் (Mars Express Orbiter) எனும் விண்கலத்தை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தினால் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Advertisment

இது செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்களை தொடர்ச்சியாக பூமிக்கு அனுப்பிவருகிறது. அந்தவகையில் தற்போது அது அனுப்பியுள்ள புகைப்படம் மூலம் செவ்வாய் கிரகத்தின் தரைக்கு அடியில் பறந்த நீர்பரப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisment

இதனை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள், இந்த நீர்பரப்பு செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து சுமார் 4,000‌ முதல் 5,000 மீட்டர் ஆழத்தில் தண்ணீர் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளனர். அதவாது சுமார் 13,123 அடியிலிருந்து 16,404 அடி ஆழத்தில் நீர் இருப்பதாகத் தெரிகிறது.