Advertisment

6 மணி நேரத்தில் ஐந்தாவது இடத்திற்குத் தள்ளப்பட்ட மார்க் ஸூக்கர்பெர்க்!

 Mark Zuckerberg pushed to fifth in 6 hours!

ஃபேஸ்புக்,வாட்ஸ்அப்,இன்ஸ்டாகிராம்உள்ளிட்டசமூகவலைத்தளங்கள்இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் நேற்று (04.10.2021) இரவு திடீரென முடங்கின.தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை இச்செயலிகள்முடங்கிப் போனது. இதனால் அதைப் பயன்படுத்தும் பயனாளர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் மற்ற சமூகவலைத்தளங்களைநாட வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதற்கிடையே, இன்று அதிகாலை 4மணிக்குத்தொழில்நுட்ப பிரச்சனை அனைத்தும் சரிசெய்யப்பட்டு இந்த மூன்றுவலைத்தளங்களும்பயன்பாட்டிற்கு வந்தன.

Advertisment

ஃபேஸ்புக் குழுமத்தில் உள்ளவாட்ஸ்அப்,இன்ஸ்டாகிராம்உள்ளிட்ட செயலிகள்சேவை கிட்டத்தட்ட 6 மணிநேரம்தடைப்பட்டநிலையில், இந்த தொழில்நுட்ப கோளாறு முடக்கத்தால்ஃபேஸ்புக் நிறுவனத்தின் உரிமையாளர்மார்க் ஸூக்கர்பெர்க்கின்சொத்துமதிப்பில்52 ஆயிரம் கோடி ரூபாய்குறைந்திருப்பதாகத்தகவல் வெளியாகியுள்ளது. இதனால் உலக பணக்காரர்கள் பட்டியலில் 5 ஆவதுஇடத்திற்குத்தள்ளப்பட்டுள்ளார்மார்க். அமெரிக்கபங்குசந்தைகளில்ஃபேஸ்புக்நிறுவனத்தின் பங்குகள் 5 சதவிகிதம் சரிந்தது. அதேபோல் விளம்பர வருவாயும்ஒருமணிநேரத்திற்கு7 கோடி ரூபாய் வீதம் 6 மணிநேரத்தடையால் 42 கோடி வருவாயை இழந்துள்ளதுஃபேஸ்புக்.

Advertisment

இந்த திடீர் முடக்கத்திற்குமுன்பு மார்க் ஸூக்கர்பெர்க் உலக பணக்காரர்கள் பட்டியலில் 3 ஆவதுஇடத்திலிருந்தார்என்பது குறிப்பிடத்தக்கது.

mark zuckerberg whatsapp instagram Facebook
Advertisment
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe