Advertisment

43 ஆண்டுகளுக்கு பிறகு கியூபாவில் நடந்த மிகப்பெரிய அரசியல் மாற்றம்...

கரீபிய கடற்பகுதியில் அமைந்துள்ள கியூபா நாட்டில் 43 ஆண்டுகளுக்கு பின் பிரதமர் பதவி கொண்டுவரப்பட்டுள்ளது.

Advertisment

Manuel Marrero Cruz selected as cuban prime minister

Advertisment

சுமார் 90 ஆண்டுகள் அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தில் இருந்த கியூபா பிடல் காஸ்ட்ரோ, சே குவேரா ஆகியோரின்தலைமையின் கீழ் நடைபெற்ற சுதந்திர போரில் வெற்றிபெற்று சுதந்திர நாடானது. சுதந்திர கியூபாவின் முதல் பிரதமராக பிடல் காஸ்ட்ரோ 1959ஆம் ஆண்டு பதவியேற்றார். பிறகு 1976ல் அவர் கியூபாவின் அதிபரான பிறகு, பிரதமர் பதவியிலிருந்து விலகினார். அதன்பிறகு அந்நாட்டில் யாரும் பிரதமர் பதவியை வகிக்கவில்லை. அதிகாரம் முழுவதும் அதிபருக்கு அளிக்கப்பட்டு, அதிபரேமுக்கிய முடிவுகள் எடுக்கும் இடத்தில் இருந்தார்.

இந்நிலையில், 2008ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் பிடல் காஸ்ட்ரோ காலமான பின் அவரது இளைய சகோதரர் ரவுல் காஸ்ட்ரோ அதிபர் பொறுப்பை ஏற்றார். 87 வயதான ரவுல் காஸ்ட்ரோ அதிபர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்த பின்னர், துணை அதிபர் மிக்வெல் டயாஸ் அதிபரானார். இந்த சூழலில், 1976 க்கு பின்னர் தற்போது மீண்டும் பிரதமர் பதவி உருவாக்கப்பட்டு, மானுவல் மார்ரீரோ க்ரூஸ் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். இது அந்நாட்டு அரசியலில் மிகப்பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.

Che guevera Cuba Fidel castro
இதையும் படியுங்கள்
Subscribe