Advertisment

நடப்பாண்டின் சக்தி வாய்ந்த மங்குட் புயல்... சீனாவை புறட்டிப்போட்டது...

typhoon

இந்த வருடத்தின் சக்கி வாய்ந்த புயலாகக் கருதப்படும் மங்குட் புயல் பிலிப்பைன்ஸைத் தாக்கியதில் இதுவரை 59 பேர் பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறி மாற்று இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பிலிப்பைன்ஸின் பக்காயோ இடத்தில் மங்குட் புயல் ஞாயிற்றுக்கிழமை கரையைக் கடந்தது. இதனால் மணிக்கு 300 கிலோமீட்டர் அளவில் சூறைக்காற்று வீசியது. இதன் காரணமாக மங்குட் புயல் பிலிப்பைன்ஸை ஒரு புறட்டு புறட்டிப்போட்டுள்ளது. மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கை இழந்து தவித்து வருகின்றனர். ஆயிரக்கணக்கானோர் தங்களின் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில், பிலிப்பைன்ஸில் கரையைக் கடந்த மங்குட் புயல் தற்போது சீனாவின் தென்பகுதி மற்றும் ஹாங்காங்கில் தனது தாக்கத்தைக் காட்டி வருகிறது. இதில் சீனாவில் இதுவரை 4 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் 7 நகரங்களில் சுமார் 5 லட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஷென்ஜென் விமான நிலையம் மூடப்பட்டது. குவாங்சோவில் விமான சேவைகள் இன்று வரை ரத்து செய்யப்பட்டு உள்ளன. ஹைனான் மாகாணத்தில் 800 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல்களை தெரிவிக்கின்றன. 2018ஆம் ஆண்டின் சக்தி வாய்ந்த புயலாக மங்குட் புயலை வானிலை விஞ்ஞானிகள் தெரிவித்ததை அடுத்து, இதனை ’மிக அதிக சக்தி வாய்ந்த’ புயல் எச்சரிக்கையாக சீனா அறிவித்துள்ளது.

Advertisment
mangkut typhoon
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe