சீனா தலைநகர் பெய்ஜிங் உள்ள கியாசோ நகரத்தில் வசிக்கும் இளைஞர் ஒருவர், அவரது கர்ப்பிணி மனைவியை அழைத்துக் கொண்டு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மருத்துவரை பார்ப்பதற்காக 40 நிமிடத்திற்கு மேல் நின்றுகொண்டே காத்திருந்துள்ளனர். ஆனால், கூட்டம் அதிகமாக இருந்ததால் பரிசோதனை செய்வதற்கு மேலும் சில நிமிடம் காக்க வேண்டியதாகியுள்ளது. இதனிடையே நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் அந்த பெண்ணுக்கு கால்வலி வந்து நிற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

Advertisment

gh

மருத்துவமனையில் போதுமான நாற்காலிகள் இருந்தும், கூட்டம் அதிகம் இருந்ததால் அனைத்தும் நிரம்பி இருந்ததுள்ளது. மேலும், கர்ப்பிணி பெண்ணுக்கு நாற்காலியை விடுவதற்கு யாரும் முன்வரவில்லை. இதனால் செய்வதறியாது தவித்த அவர் மனைவியின் கால் வலியை போக்கும் விதத்தில் தானே நாற்காலியாக மாறியுள்ளார். தரையில் மண்டி போட்ட அந்த நபர் நாற்காலியாக மாறி, மனைவியை தன் மீது உட்கார வைத்துள்ளார். இதனைக் கண்ட பொதுமக்கள், மனைவி மீது அவர் வைத்திருந்த பாசத்தில் திகைத்து நின்றுள்ளனர். இதன் வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.