ஆஸ்திரேலியாவில் தமிழகத்தைச் சேர்ந்தவர் போலீசாரால் சுட்டுக்கொலை!

nn

ஆஸ்திரேலியாவில் தமிழகத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தமிழகத்தைச் சேர்ந்த முகமது சையது அகமது (32) என்பவர் சிட்னி அர்பன் ரயில் நிலையத்திலிருந்த தூய்மை பணியார் ஒருவரை கத்தியால் தாக்கியதாகக் கூறப்படுகின்ற நிலையில், தடுக்க வந்த போலீசாரையும் முகமது சையது தாக்க முயற்சித்ததால் அவரை துப்பாக்கியால் சுட்டதாக போலீசார் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

போலீசார் சுட்டதில் இரண்டு குண்டுகள் முகமது சையது அகமது மீது பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற தகவலறிந்த இந்திய தூதரக அதிகாரிகள், ஏன் இப்படி நடந்தது? ஏன் போலீசார் அவரை உயிரிழக்கும் அளவிற்கு சுட்டார்கள்? என்பது தொடர்பாக கேள்வி எழுப்பி உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான தகவல்களை இந்திய தூதரக அதிகாரிகள் திரட்டி வருகின்றனர்.

Australia police Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe