அமெரிக்காவில் சிங்கம் ஒன்று மூன்று வயது குழந்தையை தூக்கிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர் லூயிஸ். மருத்துவரான இவர், தனது மனைவி மற்று மூன்று வயது குழந்தையுடன் வன விலங்கு பூங்காவிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் லூயிஸின் மூன்று வயது குழந்தை சிங்கம் இருந்த பகுதிக்கு சென்றுள்ளார்.

Advertisment

அப்போது யாரும் எதிர்பாராத வகையில் கூண்டில் இருந்து தாவிக்குதித்த சிங்கம் குழந்தையை முதுகில் தூக்கிக்கொண்டு செல்ல முயன்றது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த லூயிஸ், உடனடியாக சுதாரித்து தன் கையில் இருந்த கைப்பையை சிங்கத்தை நோக்கி வீசியுள்ளார். பையை பார்த்த சிங்கம் குழந்தையை விட்டுவிட்டு பையை எடுத்துக்கொண்டு மரத்தின் மீது ஏறியது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது.

Advertisment