Advertisment

ஒரு வேளை சாப்பாட்டுக்கு 32 கோடி ரூபாய் செலவு...

ஜெப் பெஸோஸ், பில் கேட்ஸ் ஆகிய இருவருக்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது மிகப்பெரிய பணக்காரராக இருப்பவர் வாரன் பூபட். மிகப்பெரிய கோடீஸ்வரராக இருந்தாலும், இவரின் எளிமையாகவும், மக்களுக்கு இவர் செய்யும் உதவிகளுக்காகவும் பிரபலமானவர்.

Advertisment

man offers 32 crores to eat food with warren buffett

இவர் கிளைட் என்ற தொண்டு நிறுவனம் மூலம் இந்த உதவிகளை செய்து வருகிறார். வீடுகள் இல்லாதவர்களுக்கு உணவு, இருப்பிடம், மற்ற தேவையான உதவிகளையும் செய்து வருகிறது. அதுபோல அடக்குமுறைகளால் பாதிக்கப்படுபவர்களுக்கும் இந்த அமைப்பு உதவி வருகிறது.

Advertisment

ஆண்டு தோறும் இந்த தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்டுவதற்காக ஏலம் ஒன்று நடத்தப்படும். அந்த ஏலத்தில் பங்கேற்று அதிக தொகை தருபவர்களுக்கு வாரன் பூபட் உடன் ஒரு வேளைஉணவு சாப்பிட வாய்ப்பு கிடைக்கும். அந்த வகையில் இந்த ஆண்டு நடந்த ஏலத்தில் ஒரு நபர் வாரன் பூபட் உடன் உணவருந்துவதற்காக $4.57 மில்லியன் டாலர்கள் கொடுப்பதற்கு முன்வந்துள்ளார். இந்திய மதிப்பில் இதன் மதிப்பு 32 கோடி ரூபாய் ஆகும். இந்த வகையில் ஒரு நபருடன் உணவு அருந்த இந்த அளவிற்கு செலவிடப்பட்ட சாதனையாக இது இருக்கும் என கருதப்படுகிறது.

jeff bezos America weird warren buffett
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe