அமெரிக்காவின் கொலம்பியா மாகாணத்தில் வசித்து வருபவர் ஜோசப். இவரின் காதலியின் பெயர் டாமி. இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். கடந்த இரண்டு வருடங்களாக ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், ஜோசப் இதற்கு முன்னதாக சிறைக்கு சென்று திரும்பியதை டாமியிடம் மறைத்துள்ளார். இதைக் கண்டுபிடித்த டாமி அவர் எதற்காக சிறைக்கு சென்றார் என்பதை விசாரித்துள்ளார். முன்னாள் காதலியை கர்ப்பமாக இருக்கும் போது அவரை கொன்ற குற்றத்துக்காக ஜோசப் சிறை சென்றதையை டாமி கண்டுபிடித்துள்ளார். இதனால் ஜோசப்பைத் தன்னைவிட்டு விலகி விடும்படி சொல்லியுள்ளார்.

g

Advertisment

இதனால் ஆத்திரம் அடைந்த ஜோசப் டாமியைக் கடத்தியுள்ளார். 3 நாள்களாக டாமி அலுவலகத்துக்கு செல்லாததால் சந்தேகம் அடைந்த அவரது அலுவலக நண்பர்கள் அது பற்றி காவல்துறையிடம் புகார் கொடுத்துள்ளனர். இதையடுத்து ஜோசப்பை கைது செய்த காவல்துறையினர் டாமி குறித்து விசாரித்துள்ளனர். காவல்துறையினரின் அதிரடி விசாரணையில் அவர் டாமியைக் கொலை செய்ததை ஒத்துக்கொண்டுள்ளார். மேலும் அவரது மண்டை ஓட்டை உடைத்து மூளையை பச்சையாக தின்றதாகவும், இதயம் நுரையீரல் உள்ளிட்ட பகுதிகளை சமைத்து சாப்பிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.