அமெரிக்காவின் ஜார்ஜியா பகுதியில் ஒரு கடையில் திருடன் புகுந்துவிட்டதாக அந்நகர போலிசாருக்கு ஒரு தொலைப்பேசி வந்துள்ளது. அதனால் அதிர்ச்சி அடைந்த காவலர்கள்,விரைந்து அந்த கடைக்கு வந்தனர். அப்போது திருடர்கள் இருவர் அந்த கடையில் இருந்து வெளியே ஓடியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், இருவரையும் துரத்திக்கொண்டு ஓடியுள்ளனர். திருடர்களும் அவர்கள் கையில் சிக்காமல் ஓடியுள்ளார்கள்.

அப்போது அந்த கடையில் பொருட்கள் வாங்கிக்கொண்டு சக்கர வண்டியில் தள்ளிக்கொண்டு சென்ற இளைஞர் ஒருவர் திருடர்களை காவலர்கள் துரத்துவதை பார்த்துள்ளார். உடனடியாக சுதாரித்தஅவர் தனது வண்டியை திருடர்கள் மீது தள்ளிவிட்டுள்ளார். திருடர்களும் அதிர்ச்சியில் கீழே விழுந்துள்ளார்கள். உடனடியாக காவலர்கள் அவர்களை கைது செய்கிறார்கள். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.