ADVERTISEMENT

85 லட்சத்துக்கு விலை போன ஒற்றை வாழைப்பழம்!

08:57 PM Dec 09, 2019 | suthakar@nakkh…

மியாமியில் நடந்த கண்காட்சி ஒன்றில் காட்சிப்படுத்தப்பட்ட ஒரு வாழைப்பழம் இந்திய மதிப்பில் 85 லட்சம் ரூபாய் வரை ஏலம் போன சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இத்தாலிய கலைஞரான மௌரிஷியோ என்பவர் தன் வித்தியாச முயற்சிகளால் உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்டவர். இந்த முறை ஒரு சாதாரண வாழைப்பழத்தை தன் படைப்புக்கு பயன்படுத்திய மௌரிஷியோ, அதை கண்காட்சி நடந்த ஹோட்டல் அறையில் டேப் கொண்டு சுவற்றில் ஒட்டி வைத்துள்ளார்.

ADVERTISEMENT



ADVERTISEMENT

அவர் காமெடியன் என பெயர் வைத்த அந்த படைப்பு இந்திய மதிப்பில் 85 லட்சம் ரூபாய் வரை ஏலம் போன விநோதம் நடந்துள்ளது. இதையடுத்து ஒரு தரப்பினர் இதை அவ்வளவு விலை கொடுத்து வாங்கிய நபர் தான் காமெடியன் எனவும், மற்றொரு தரப்பினர் இது கலையின் உச்சம் எனவும் கூறி வருகின்றனர். அதன் பின்னர் அந்த வாழைப்பழத்தை மற்றொரு கலைஞர் சுவற்றிலிருந்து எடுத்து சாப்பிட்ட காமெடியும் நடந்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT