man attended corona party passed away for corona

அமெரிக்காவில் கரோனா வைரஸ் பார்ட்டியில் கலந்துகொண்ட நபர் ஒருவர் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளார்.

Advertisment

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் 1.3 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5.7 லட்சத்தைக் கடந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்க மக்களின் ஒரு சாரார், கரோனா வைரஸ் என்பது ஏமாற்று வேலை எனவும், வதந்தி எனவும் விமர்சித்து வருகின்றனர். இப்படியான விமர்சனங்களைக் கொண்டோர், அரசு கட்டுப்பாடுகளுக்கு எதிராக பொது இடங்களில் ஒன்றுகூடி கேளிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில் அமெரிக்காவின் டெக்ஸாஸ் நகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், இதுபோன்ற கரோனா பார்ட்டியில் கலந்து கொண்டு தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்துள்ளார். மேலும், அந்த நபர் இறப்பதற்கு முன்பு, தன்னை கவனித்துக்கொண்டு மருத்துவரிடம், "நான் தவறு செய்துவிட்டேன் என்று நினைக்கிறேன், இது ஒரு ஏமாற்று வேலை என்று நான் நினைத்தேன், ஆனால் அது இல்லை" எனத் தெரிவித்து தனது உயிரை விட்டுள்ளார் அவர். கரோனா என்பது ஏமாற்றுவேலை எனக்கூறி பார்ட்டியில் கலந்துகொண்ட நபர் ஒருவர் தனது வாழ்வின் இறுதி நிமிடத்தில் கரோனா குறித்த ஆபத்தை உணர்ந்தது அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.