ஆஸ்கார் விருதினைத் திருடிவிட்டு, அதுகுறித்து முகநூல் வீடியோவில் பெருமையாக பதிவிட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

MC

90ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நேற்று லாஸ் ஏஞ்சலஸ் நகரில் வைத்து நடைபெற்றது. இந்த விழாவில் சிறந்த நடிகைக்கான விருதினை திரீ பில்போர்ட்ஸ் படத்திற்காக ஃப்ரான்ஸ் மெக்டோர்மண்டுக்கு வழங்கப்பட்டது. இந்த விருது அன்று மாலையே திருடுபோனதாக அழுத முகத்தோடு அங்கிருந்தவர்களிடம் புகாரளித்திருக்கிறார் மெக்டோர்மண்ட்.

அதேநாளில் இரவு டெர்ரி பிரையண்ட் தனது முகநூல் பக்கத்தில், இசை மற்றும் தயாரிப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தனது குழுவிற்கு விருது வழங்கப்பட்டுள்ளதாகக் கூறிக்கொண்டு, ஆஸ்கர் விருதையும் காட்டியிருக்கிறார். அது திருடப்பட்ட விருது என்பது தெரியாத பலரும், அவருக்கு வாழ்த்தியிருக்கின்றனர்.

Advertisment

இதனைக் கவனித்துக் கொண்டிருந்த புகைப்படக் கலைஞர் அருகிலிருந்த காவல்துறையினர் உதவியுடன் பிரையண்டைப் பிடித்துள்ளனர். விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஒரு முறை கூட பிரையண்ட் மேடையேறாததால் அவர்மீது சந்தேகம் எழுந்தது; அதனால், அவரைப் பின்தொடர்ந்தேன் என அந்த புகைப்படக் கலைஞர் தெரிவித்திருக்கிறார்.

Advertisment

பிரையண்ட் கைது செய்யப்பட்டு, தற்போது 20ஆயிரம் டாலர் பிணையுடன் விடுவிக்கப்பட்டுள்ளார். திருடப்பட்ட ஆஸ்கர் விருதினை மெக்டோர்மண்ட் மீண்டும் கண்ணீர் மழ்க பெற்றுக்கொண்டார்.