Skip to main content

முடக்கப்படுகிறதா மல்லையா சொத்து??!! மகிழ்ச்சியில் வங்கிகள்!!

Published on 06/07/2018 | Edited on 06/07/2018

 

mallaya

 

 

 

விஜய் மல்லையாவின் பிரிட்டன் சொத்துக்கள் முடக்க  பிரிட்டன் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இந்திய வங்கிகளில் 9000 கொடிக்கும்மேல் கடன்வாங்கி அவற்றை திரும்ப செலுத்தமுடியமல் லண்டனுக்கு தப்பி சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவின் பிரிட்டன் சொத்துக்கள் முடக்கப்பட்டு பறிமுதல் செய்ய இருப்பதாக பிரிட்டன் கோர்ட் தெரிவித்துள்ளது.

 

 

 

 

இந்திய கடன் மீட்பு தீர்பாணையம் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி பைரன், பிரிட்டனிலுள்ள மல்லையாவின் சொத்துக்களை ஆய்வு செய்யவும் பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து லண்டனுக்கு அருகிலுள்ள ஹேர்ட்போர்டுஷர் பகுதியிலுள்ள விஜய் மல்லையாவிற்கு சொந்தமான வீடுகள் மற்றும் விடுதிகள் ஆகியற்றை அமலாக்க துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பறிமுதல் செய்யவுள்ளனர்.

 

இந்த நடவடிக்கையால் மல்லையாவிற்கு கடன் கொடுத்து பாதிக்கப்பட்ட இந்திய வங்கிகளின் கூட்டமைப்பு மகிழ்ச்சி தெரிவித்துள்ளன. 

சார்ந்த செய்திகள்

Next Story

முடிவெடுத்த அரசாங்கம்... முரண்டுபிடிக்கும் மல்லையா...

Published on 05/02/2019 | Edited on 05/02/2019

 

fghfghhgf

 

கடன் வாங்கிவிட்டு நாட்டை விட்டு தப்பி சென்ற வழக்கில் விஜய் மல்லையாவை நாடு கடத்த அந்நாட்டு நீதிமன்ற கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. அதன்படி தலைமைநீதிபதியின் உத்தரவு உள்துறை செயலருக்கு அனுப்பப்பட்டு அவர் அதற்கான கோப்பில் கையெழுத்திட்டுள்ளனர். வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்ற உத்தரவின் பேரில் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த அமைச்சர் சாஜித் ஜாவித் பலகட்ட பரிசீலனைக்கு பிறகு இதற்க்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதனை எதிர்த்து வரும் 14 ஆம் தேதிக்குள் விஜய் மல்லையா மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விஜய்மல்லையா தனது ட்விட்டரில் பக்கத்தில் கூறும்போது, 'கடந்த டிசம்பர் 10-ம் தேதி வெஸ்ட் மின்ஸ்டர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக நான் மேல்முறையீடு செய்ய உள்ளேன். உள்துறை அமைச்சகத்தின் உத்தரவைப் பார்த்தபின் மேல்முறையீடு பற்றி பரிசீலிக்க இருந்தேன். இப்போது மேல்முறையீடு செய்யவது என முடிவு செய்துவிட்டேன்' எனத் தெரிவித்துள்ளார்.

 

 

Next Story

அன்று 3 கோடியில் தங்கத்தோடு, வைர ப்ரேஸ்லட்... இன்று??? விஜய் மல்லையாவின் இன்றைய நிலை என்ன??

Published on 13/12/2018 | Edited on 13/12/2018
vijay maalya

 

விஜய் மல்லையா கிங்ஃபிஷர் நிறுவனத்தின் அதிபர். செல்வந்தர், ஜொலிக்கும் ப்ளேபாய் இப்படியாகதான் நமக்கு தெரியும். 2016க்கு பிறகு அவர் வெளிநாட்டில் தஞ்சமடைந்த ஒரு கடனாளியாக தெரியும். விஜய் மல்லையாவை லண்டனிலிருந்து நாடுகடத்துவதற்கான பணிகள் நடந்துவருகின்றன. ஏற்கனவே அவரது சொத்துகள் அனைத்தும் நீதிமன்றத்தின் வசம் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. 
 

தனது நிறுவனத்திற்காக பாரத ஸ்டேட் வங்கி உட்பட பல்வேறு வங்கிகளில் அவர் வாங்கிய கடன் மற்றும் அதற்கான வட்டித்தொகை ஆகியவற்றின் மதிப்பு  ரூ. 9000 கோடி, அவர் நாட்டைவிட்டு போனது, நாடுகடத்த உத்தரவிட்டது. இப்படி எல்லாமே அதற்காகதான்.  


ஆடம்பரத்தை அதிகம் விரும்பும் மல்லையா 10 இலட்சம் மதிப்புள்ள 2 தங்க நெக்லஸ், 3 கோடிக்குமேல் மதிப்புள்ள தங்கத்தோடு, வைர ப்ரேஸ்லட்டும், தினசரி பயன்பாட்டிற்காக 70 இலட்சம் மதிப்புள்ள 9 ஆடம்பர வாட்ச், பச்சை மரகதக்கல் பதித்த மோதிரம், வைரக்கல் பதித்த மோதிரம் இவற்றின் மதிப்பு மட்டும் கிட்டதட்ட 5.4 கோடி. மேலும் 9 கோடி மதிப்புள்ள 2 செவ்வந்திக்கல். ரொல்ஸ் ராய்ஸ் பென்டோம், மினி ஜான் கூப்பர், ரேஞ்ச் ரோவர், பென்ட்லே டர்போ, 3 ஃபெராரி, இவற்றின் மதிப்பு மட்டும் 16 கோடி. 3 சொகுசு கப்பல்கள் இவற்றின் மதிப்பு மட்டும் 30 கோடி. இவையெல்லாம் அவரது சொத்துகளில் சிலவைதான். இவைகளில் பல அவரின் அன்றாட பயன்பாடுகளில் உட்படுபவை என்பது குறிப்பிடத்தக்கது. 


நேற்று விஜய் மல்லையாவின் வழக்கறிஞர் மும்பை நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது அவர் கடன் மோசடி உள்ளிட்ட வழக்குகளில் மல்லையாவிடம் இருந்த சொத்துகள் அனைத்தும் முடக்கப்பட்டன. அவரிடம் இருந்த வாட்ச், ப்ரேஸ்லெட், மோதிரங்கள் உள்ளிட்ட நகைகள், சொகுசு கார்கள் என அனைத்துமே நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுவிட்டன, என குறிப்பிட்டிருந்தார். வைர ப்ரேஸ்லெட் உட்பட 7 நகைகள், 9 வாட்ச், 9 சொகுசு கார்கள், சொகுசு கப்பல்கள், 12 கத்தி, 2 கேடயம், கவச உடையுடன் கூடிய சிலை ஆகியவையும் அடங்கும். என தெரிவித்துள்ளார்.