71 வது கேன்ஸ் திரைப்படவிழாநடைபெற்று வருகிறது. இதில் இந்திய நடிகைகள் கங்கனா ரனாவத், சோனம் கபூர், ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோனேஎன்று அனைவரும் சிவப்பு கம்பளத்தில் வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். ஆனால் மல்லிகா ஷராவாத் மட்டும் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சியளித்தார். சிவப்பு கம்பளத்தில் வராமல் அதற்கு பக்கத்தில் ஒரு கூண்டில் அடைபட்டிருந்தார்.

Mallika Sherawat Caged In Cannes for a Cause

இதனைக்கண்ட ரசிகர்களும், பத்திரிகையாளர்களும் ஏன் இவ்வாறு கூண்டில் அடைபட்டுள்ளீர்கள் என்று கேட்டதற்கு மல்லிகா ஷராவத் "நான் ஒன்பதாவது முறையாக கேன்ஸ் திரைப்படவிழாவிற்கு வந்திருக்கிறேன். சிறுமிகள் பாலியல் தொழிலுக்கு தள்ளப்படுவதை தடுக்கத்தான் இதுபோன்ற விழிப்புணர்வில் ஈடுபட்டுள்ளேன். இந்த விழிப்புணர்வு இந்திய சிறுமிகளுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்தமாக உலகில் உள்ள அனைத்து சிறுமிகளுக்கும்தான். சிறுமிகள்படும் அவஸ்த்தையை இந்த12x8 அறைக்குள் இருக்கும்பொழுது நான் உணர்கிறேன். பெண்கள் ஒவ்வொரு நிமிடமும்பாலியல் தொல்லைகளுக்குஆளாகின்றனர், அதனால் என்னால் முடிந்த அளவிற்கு தற்போது குரல் எழுப்பியுள்ளேன். கூடிய விரைவில் இதற்கான தீர்வு வரவேண்டும்" என்று கூறினார்.

Advertisment

ஏற்கனவே மல்லிகா ஷராவத் ஒரு அரசுசாரா தொண்டு நிறுவனத்திற்கு தூதுவராகவும் இருந்துவருகிறார்.தற்போது திரைப்படவிழாவில் கேன்ஸ்கூண்டில் 12 மணிநேரம் உள்ளேஇருந்து தனது விழிப்புணர்வு நிகழ்வை நடத்தியுள்ளார்.