Advertisment

நாய் என நினைத்து வீட்டில் கரடிக்குட்டியை வளர்த்த பிரபல பாடகி...

நாய் என நினைத்து தனது வீட்டில் கரடிக்குட்டியை வளர்த்து வந்த மலேசியாவின் பிரபல பாடாகி ஸரித் சோபியா யாசின் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

malaysian pop singer zarith arrested for keeping bear as pet

சில மாதங்களுக்கு முன்பு ஒருநாள் இரவில் பணியை முடித்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தபோது சாலையோரம் ஏதோ குட்டி ஒன்று அடிபட்டு கிடப்பதை கண்டுள்ளார் சோபியா. அதன் அருகில் சென்றபோது அது நாய்க் குட்டி என நினைத்து அதனை வீட்டிற்கு கொண்டு வந்துள்ளார். மருத்துவ சிகிச்சை அளித்து அதனை பராமரித்து சில நாட்கள் வளர்ந்த பிறகே அது ஒரு வகை கரடி குட்டி என அவருக்கு தெரிய வந்துள்ளது.

Advertisment

ஆனால் அதன் பின்னரும் அதனை அதிகாரிகளிடம் ஒப்படைக்காமல் வீட்டிலேயே வைத்து வளர்த்துள்ளார். அது அவரின் பேச்சை கேட்டு, சாதுவாக நடந்துகொண்டதால் அதனை வீட்டிலேயே அவர் செல்லப்பிராணியாக வளர்த்ததாக அவரது நண்பர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அந்தக் கரடி வீட்டின் ஜன்னல் வழியே எட்டிப்பார்த்துள்ளது. அதைக் கண்ட இருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர். அது இணையத்தில் வைரலாக நிலையில் வனத்துறையினர் தகவல் அறிந்து அவரது வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது அங்கிருந்த கரடியை மீட்டதுடன் காவலர்கள் சோபியாவையும் கைது செய்தனர்.

Malaysia singer weird
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe