Advertisment

பதவியை துறந்த மலேஷிய மன்னர்; திருமணம் குறித்து வந்த வதந்தியால் முடிவு..?

gsbvs

Advertisment

மலேசியாவின் பதினைந்தாவது மன்னரான ஐந்தாம் சுல்தான் முகம்மது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 49 வயதான இவர் 25 வயதான ரஷ்ய அழகி பட்டம் வென்றவரை ரகசிய திருமணம் செய்துகொண்டதாக செய்திகள் பரவின. இதனையடுத்து இந்த செய்திக்கு எந்தவித விளக்கமும் தெரிவிக்காமல் இருந்த மன்னர் தரப்பு தற்பொழுது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மலேசியா மன்னரான ஐந்தாம் சுல்தான் முகம்மது தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அவரது உடல்நிலையேகாரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் வரலாற்றிலேயே ஒரு மன்னர் முதன்முதலாக தனது பதவியை ராஜினாமா செய்வது இதுவே முதல் முறை. மலேஷியா நாட்டு வழக்கப்படி ஒன்பது அரச குடும்பங்களை சேர்ந்த நபர்கள் ஒவ்வொரு ஐந்து ஆண்டுக்கும் ஒருவர் வீதம் பதவி வகிப்பார். தற்பொழுது இவரின் ராஜினாமாவிற்கு பிறகு அடுத்த மன்னரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் முடிவடைந்து, வரும் 31 ஆம் தேதி புதிய மன்னர் பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

king Malaysia
இதையும் படியுங்கள்
Subscribe