மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். மலேசிய வளர்ச்சி திட்டங்களில் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்ததன் பேரில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஊழல் புரிந்து உள்ளதாக நஜிப் ரசாக் மீது எழுந்த குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, அவருக்கு நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என தடை விதிக்கப்பட்டது. அவரது வீட்டிலும், அவருக்கு சொந்தமான இடங்களிலும் போலீசார் அதிரடி சோதனைகள் நடத்தினர். அவருக்கு எதிரான விசாரணையை ஊழல் தடுப்பு அமைப்பு தீவிரப்படுத்திய நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் விசாரணைக்கு எடுக்கலாம் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.