மலேசியநாட்டில், தனது12 வயது வளர்ப்பு மகளைப் பாலியல்வன்கொடுமை செய்தநபருக்குஅந்தநாட்டுநீதிமன்றம் 1,050 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. மேலும், 24 கசையடிகள் வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தண்டனை விதிக்கப்பட்ட அந்த நபர், 2018 ஜனவரிமுதல் கடந்தாண்டு பிப்ரவரிமாதம் வரை தனது12 வயது வளர்ப்பு மகளை, 105 முறை பாலியல்வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளான்.
இந்த வழக்கைவிசாரித்த நீதிமன்றம், ஒவ்வொரு வன்கொடுமை குற்றத்திற்கும் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பானதீர்ப்பை வாசிக்க மலேசியநீதிமன்றம் ஐந்து மணி நேரங்களைஎடுத்துக்கொண்டது எனஅந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.