மலேசியாவில் கஞ்சாவை மருத்துவத்திற்கு பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே கஞ்சாவை மருத்துவத்திற்காக பயன்படுத்தலாம் என்று சட்டப்பூர்வ அனுமதி கொடுத்த முதல் நாடாக மலேசியா உருவெடுத்துள்ளது.
கடந்த மாதம், மருத்துவ குணம் வாய்ந்த கஞ்சா எண்ணெய்யை விற்பனை செய்ததால் இளைஞர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு வந்தது. இதையடுத்து கடந்த வாரம் அந்த இளைஞருக்கான தண்டனை குறிப்பு பற்றி அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் இதுகுறித்து அலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.