இலங்கை அதிபர் தேர்தல், கடந்த 16-ந் தேதி நடைபெற்றது. அதில் கோத்தபய ராஜபக்சே, 13 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அந்நாட்டின் 8-வது அதிபராக பதவி ஏற்றார். அதனையடுத்து நேற்று இலங்கை பிரதமர் பதவியை ரணில் விக்கிரமசிங்கே ராஜினாமா செய்திருந்தார். இந்நிலையில் இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சே நியமனம் செய்யப்படவுள்ளார் என்று அதிபரான கோத்தபய ராஜபக்சே அறிவித்தார்.

Advertisment

rajapakse

கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ராஜபக்சே குடும்பத்தில் ஒருவரான கோத்தபய ராஜபக்சே இலங்கை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் மகிந்த ராஜபக்சே பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது இலங்கை நாடாளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்சே பிரதமாரக பதவி பிரமாணம் ஏற்றுக்கொண்டார்.

Advertisment

ஏற்கனவே ஜூன் 6 2004 முதல் அதிபராக பதவியேற்கும் வரை முதன் முறையாக பிரதமராக பதவி வகித்தார் மஹிந்தா ராஜபக்சே. இதன்பின் 2005 ஆண்டு முதல் 2015 ஆண்டு வரை மஹிந்த ராஜபக்சே இலங்கையின் அதிபராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் 2018ஆம் ஆண்டு அதிபராக இருந்த சிறிசேனாவுக்கும் பிரதமராக இருந்த ரணிலுக்கும் பிரச்சனை ஏற்பட, உடனடியாக ரணிலை பிரதமர் பதவியிலிருந்து தூக்கிவிட்டு மஹிந்த ராஜபக்சேவை பிரதமராக்கினார். ஒரு மாதம் வரை பிரதமராக ராஜபக்சே அப்போது இருந்த நிலையில் இலங்கை உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பால் அந்த பதவி மீட்னும் ரணில் விக்ரமசிங்கேவுக்கே கிடைத்தது.