Mahinda Rajapaksa thanks the Chief Minister of Tamil Nadu!

இலங்கையில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. பால், மாவு,பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காததால் வெகுண்டெழுந்த மக்கள், ராஜபக்சே சகோதரர்கள் அரசியலிலிருந்து வெளியேறக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டு அரசு சார்பில், இலங்கை மக்களுக்கு '40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர், உயிர்காக்கும் மருந்துகள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இலங்கையில் வாழும் மக்களுக்கு உதவும் வகையில் நல்லெண்ணம் கொண்ட அனைவரும் நம்மால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டிய தருணம் இது. இதற்காக நன்கொடை வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்நிலையில் தமிழக முதல்வருக்கு இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச நன்றி தெரிவித்துள்ளார். ''இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைக்கப்படும் என அறிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், அவரது அரசுக்கும் இலங்கை மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இலங்கை சந்தித்திருக்கும் பொருளாதார நெருக்கடி பிரச்சனையை அண்டை நாட்டு பிரச்சனையாகப் பார்க்காது உதவிய உங்களுக்கு நன்றி'' என மகிந்த ராஜபக்ச சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.