இலங்கை அதிபர் தேர்தல், கடந்த 16-ந் தேதி நடந்தது. இதில் கோத்தபய ராஜபக்சே, 13 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அந்நாட்டின் 8-வது அதிபராக பதவி ஏற்றார். அதனையடுத்துஇலங்கை பிரதமர் பதவியை ரணில் விக்கிரமசிங்கே ராஜினாமா செய்திருந்தார். இந்நிலையில் இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சே நியமனம் செய்யப்படவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/zasqwe_0.jpg)
கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ராஜபக்சே குடும்பத்தில் ஒருவரான கோத்தபய ராஜபக்சேஇலங்கை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் அதேநேரத்தில் ராஜபக்சே குடும்பத்தில் மகிந்த ராஜபக்சே பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே2005 ஆண்டுமுதல் 2015 ஆண்டு வரை மஹிந்த ராஜபக்சே இலங்கையின் பிரதமராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.