மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்திஆஷிஷ் லதா ராம்கோபின். தென்னாப்பிரிக்காவில் வசித்துவரும் இவர், இந்தியாவில் இருந்து மூன்று கண்டெய்னரில் கைத்தறிகள் வந்துள்ளதாகவும், அவற்றிற்கு இறக்குமதி மற்றும் சுங்கவரிசெலுத்த பணமில்லை என கூறி எஸ்.ஆர்.மஹாராஜிடம் 6.2 மில்லியன் ரேண்ட் கோடி பணம் பெற்றுள்ளார். அவரிடம் கைத்தறியில் வணிகத்தின் லாபத்தில் பங்கு தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.
மேலும், இந்தியாவில் இருந்துவந்ததாக அவர் கூறிய கண்டெய்னர்கள் தொடர்பாக சில ஆவணங்களையும் ஆஷிஷ் லதா ராம்கோபின் காட்டியுள்ளார். ஆனால் அந்தஆவணங்கள் போலி என்பதும், இந்தியாவில் இருந்து அவ்வாறான எந்தக் கண்டெய்னரும்வரவில்லை என்பதும் பின்னர் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்துஆஷிஷ் லதா ராம்கோபின் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தென்னாப்பிரிக்க நீதிமன்றம்,மோசடி செய்தற்காக ஆஷிஷ் லதா ராம்கோபின்னுக்குஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.