Advertisment

அழகின் ரகசியத்திற்கு காரணம் சிறுநீரும், ஐஸ் கட்டி குளியலும்தான்....

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகியான மடோனா தனது அழகின் ரகசியம் என்ன என்று இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை பதிவிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளார்.

Advertisment

madonna

61 வயதாகும் பாடகி மடோனா, தனது அழகின் ரகசியத்திற்கு காரணம் அதிகாலை மூன்று மணிக்கு நான் எடுக்கும் ஐஸ் கட்டி குளியல்தான் என்று வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். மேலும் அந்த ஐஸ் கட்டி குளியல்போடுவதனால் தனது உடம்பில் ஏற்பட்டிருக்கும் காயங்கள் அனைத்தும் சரியாகிவிடுவதகவும் தெரிவித்துள்ளார் மடோனா. பின்னர் அந்த வீடியோவில் அவர் குளிக்கும் நீரானது எவ்வளவு சில்லென்று இருக்கிறது என்பதை காட்ட, அணிந்திருந்த சாக்ஸை அவிழ்த்து செக்கச்சிவப்பாக இருக்கும் சருமத்தை காட்டுகிறார்.

இதன்பின் இறுதியாக ஒரு கப்பில் மஞ்சள் நிறத்தில் இருப்பதை குடித்துகொண்டிருக்கும்போது, இது என்னுடைய சிறுநீர் என்று வீடியோ பார்க்கின்றவர்களுக்கு அதிர்ச்சியை கொடுக்கிறார் மடோனா. அவருடைய அழகின் ரகசியத்தில் இதுவும் ஒன்றாம்.

Advertisment

முன்னதாக ஒரு பேட்டியில் அடிபாதை சாஃப்ட்டாக வைத்துக்கொள்ல சிறுநீரை பயன்படுத்துவேன் என்று மாடோனா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

world
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe