/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/921_3.jpg)
மைக்ரோ சாஃப்ட் நிறுவனரும் உலகின் முன்னணி பணக்காரர்களின் ஒருவரான பில்கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா இருவரும் கடந்த 2021 ஆம் ஆண்டு பிரிவதாக அறிவித்தனர். 27 ஆண்டுகள் நீடித்திருந்தஅவர்களது திருமண வாழ்க்கை அப்போது முடிவுக்கு வந்தது.
தற்போது 67 வயதான பில்கேட்ஸ் மீண்டும் காதலில் விழுந்துள்ளதாக ஆங்கில ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. கடந்த 2019 ஆம் ஆண்டு புற்றுநோயால் உயிரிழந்த ஆரக்கிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஹர்டின் மனைவி பவுலா ஹர்ட் (60) மீது பில்கேட்ஸ் காதல் வயப்பட்டுள்ளதாகஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து அமெரிக்காவை சேர்ந்த பிரபல இதழ் ஒன்று, ‘பில்கேட்ஸும் பவுலாவும் டேட் செய்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். ஆனால், பவுலா இன்னும் பில்கேட்ஸின் பிள்ளைகளை சந்திக்கவில்லை’ எனக் கூறியுள்ளது. பில்கேட்ஸுக்கு ஜென்னர்(26), ரோரி (23) மற்றும் போப் (20) என்ற மூன்று பிள்ளைகள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் இறுதியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியை இருவரும் ஒன்றாக பார்த்து ரசித்தனர். உங்களுக்கு மீண்டும் காதல் வருமா என்ற கேள்விக்கு அவர், "கண்டிப்பாக நான் ஒன்றும் ரோபோ இல்லை" என்று பதில் அளித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)