
நோயாளியுடன் பாலியல் உறவில் இருந்தபோது நோயாளி உயிரிழந்துஅதனால் செவிலியர் பணி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் இங்கிலாந்தின் வேல்ஸில் நிகழ்ந்துள்ளது.
இங்கிலாந்தில் உள்ளவேல்ஸின் ரெஸ்க்ஸ்ஹாம் நகரில் செயல்பட்டு வந்த மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றி வந்தவர் பெனலாப் வில்லியம்ஸ். 42 வயதான பெனலாப் வில்லியம்ஸ் அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவருடன் பாலியல் தொடர்பில் இருந்துள்ளார். மருத்துவமனையின் பின்புறத்தில் மருத்துவப் பணியாளர்கள் கார் நிறுத்தும் பகுதியில்அந்த நோயாளியுடன் அடிக்கடி காரில் பாலியல் உறவில் செவிலியர் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு அந்த நோயாளியுடன் காரில் செவிலியர் பாலியல் உறவில் இருந்த நேரத்தில் திடீரென நோயாளியின் இதயம் செயலிழந்து மாரடைப்பு ஏற்பட்டு காரிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த மருத்துவமனை அதிகாரிகள் அங்கு சென்று பார்த்தபொழுது காரில் ஆடையின்றி அரைநிர்வாணக் கோலத்தில் நோயாளி இறந்து கிடந்தார். நோயாளியுடனானஇந்த தொடர்பு குறித்து செவிலியர் பெனலாப்பை அவருடன் பணியாற்றிய சக பணியாளர்கள் ஏற்கனவே எச்சரித்து வந்த நிலையில், அதையெல்லாம் அவர் அலட்சியப்படுத்தியுள்ளார். செவிலியர் பணிக்கு எதிராகவும், அதன் கண்ணியத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும்நடந்து கொண்டதாக மருத்துவமனை நிர்வாகம் அவரை பணிநீக்கம் செய்துள்ளது.
Follow Us