Advertisment

தமிழ் வாழ்க, தந்தை பெரியார் வாழ்க... லண்டனில் நடந்த உலகக்கோப்பை போட்டியில் முழக்கமிட்ட ரசிகர்கள்...

நேற்று நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டி எட்ஸ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது.

Advertisment

india england match

இந்த ஆட்டத்தைப் பார்க்க சென்ற ரசிகர் ஒருவர் தமிழ் வாழ்க, தந்தை பெரியார் வாழ்க என்ற பதாகையுடன் நின்றார். தேசியக் கொடியை போர்த்தியிருந்த அவர், கையில் திராவிடர் கழகத்தின் கொடியை வைத்திருந்தார். சிலர் இந்த முழக்கத்தையும் எழுப்பினர். அந்த பதாகை வைத்திருந்த நபரின்புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த உறுப்பினர்கள் பதவியேற்கும்போது ஜெய் ஸ்ரீராம், ஜெய் காளி என முழக்கமிட்டனர். அதைத்தொடர்ந்துதான் தமிழ்நாட்டு உறுப்பினர்கள் தமிழ் வாழ்க, தந்தை பெரியார் வாழ்க, அம்பேத்கர் வாழ்க, மார்க்ஸியம் வாழ்க என முழக்கமிட்டனர்.

Advertisment

அங்கு ஆரம்பித்த ஜெய் ஸ்ரீராம் பிரச்சனை. அதைத்தொடர்ந்து தாழ்த்தப்பட்டவர்களையும், சிறுபான்மையினரையும் ஜெய் ஸ்ரீராம் எனக்கூற சொல்லி தாக்கினர். ஜார்க்கண்ட்டில் இளைஞர் ஒருவர் இந்த முழக்கத்தை கூற மறுத்ததால் அடித்தே கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

England icc worldcup 2019 India london WorldCup
இதையும் படியுங்கள்
Subscribe