விவசாய பயிர்களை நாசம் செய்யும் வெட்டுக்கிளிகளை ஒழிக்க பாகிஸ்தான் அமைச்சர் தந்த யோசனை ஒன்று சமூகவலைத்தளத்தில் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.

Advertisment

locusts problem in pakistan

பலுசிஸ்தானின் கடற்கரை பகுதிகளில் அதிகளவில் காணப்படும் வெட்டுக்கிளிகள் தற்போது கராச்சி பகுதிக்கு பெருந்திரளாக வந்திருக்குறது.பயிர்களை நாசம் செய்யும் இவற்றால் அங்குள்ள விவசாயிகள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளனர். இந்தநிலையில் வெட்டுக்கிளிகள் பிரச்சனைக்கு சிந்த் மாகாண அமைச்சர் முகமது இஸ்மாயில் கூறிய தீர்வு கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.

"பொது மக்கள் இந்த சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வெட்டுக்கிளிகளை பிடித்து, சமைத்து பிரியாணி முதலிய உணவுகளை தயார் செய்து சாப்பிடுங்கள். மக்களுக்கு உணவாக மாறுவதற்காகத் தான் இந்த பூச்சிகள் இங்கே வந்துள்ளன” என கூறியுள்ளார். மேலும், இந்த வெட்டுக்கிளிகளால் பயிர்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை எனவும் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தி பூச்சிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்தநிலையில், அவரது பிரியாணி யோசனையை இணையவாசிகள் கிண்டலடித்து வருகின்றனர்.