Advertisment

லிப் ஃபில்லரால் நேர்ந்த அவலம்; ஓவர்டோஸ் உதட்டுக்கும் ஆகாது

Lip fillers suffer from lip fillers; an overdose does not happen to the lips either

நவீன உலகில் முக அறுவை சிகிச்சை, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் முகத்தை சீரமைப்பது என பல்வேறு முறைகள்வந்துவிட்ட போதிலும் எதுவுமே அளவிற்கு அதிகமானால் தீமை என அடிக்கடி மருத்துவ உலகம் எச்சரிக்கிறது. குறிப்பாக மாடலிங் துறையைச் சேர்ந்த அழகிகள் மற்றும் நடிகைகள் தங்களை அழகாகக் காட்டிக்கொள்ள இதுபோன்ற அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றனர். அப்படி ஒரு சிகிச்சை முறையால் மாடலிங் அழகி ஒருவர் அலங்கோலமாகியுள்ளது தொடர்பான வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

Lip fillers suffer from lip fillers; an overdose does not happen to the lips either

லிப் ஃபில்லர் என்ற முறை ஒன்று அண்மையில் பிரபலமாகி வருகிறது. அதாவது உதடுகளை அழகாக எடுத்துக் காட்டுவதற்காக இந்த சிகிச்சை முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஊசி மூலம் சில குறிப்பிட்ட மருந்தை உதட்டில் செலுத்தினால் உதடுகள் அழகாக மாறுமாம். இந்த சிகிச்சையை பல்வேறு பிரபலங்களும் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நியூயார்க்கை சேர்ந்த ஜெசிகா என்ற மாடல் அழகி ஒருவர் இந்த சிகிச்சையைஎடுத்துள்ளார். ஒருமுறை இருமுறை அல்ல ஆறு முறை எடுத்துக் கொண்ட சிகிச்சை ஓவர்டோஸ் ஆகி உதடுகள் வீங்கி அலங்கோலமாக மாறியுள்ளார்.சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ள அந்த நடிகை, ''கிளினிக்கில் இருந்த மருத்துவர் புதிய லிப் ஃபில்லர் வந்துள்ளது எனவும், இலவசமாக செலுத்தி விடுகிறேன் என்றும் கூறி சிகிச்சை மேற்கொண்டதால்தற்பொழுது என்னுடைய உதடுகள் இப்படி மாறிவிட்டது” என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Advertisment

model newyork Surgery Treatment
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe