நியூஸிலாந்தின் கேண்டர்பரி பகுதியில், எமிரேட்ஸ் நிறுவனத்தின் ஏ380 விமானம் க்றிஸ்ட் சர்ச் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது, அவ்விமானத்தை மின்னல் தாக்கிய சம்பவம் அதிர்வை ஏற்படுத்துயது. டேனியல் க்யூரி என்ற விமானி, விமானம் திரும்பும்போதும், இறங்கும்போதும் மின்னல் தாக்கிய காட்சியை தனது மொபைலில் படம்பிடித்ததோடு சமூகவலைதளத்தில் அந்த காட்சியை பதிவேற்றம் செய்திருந்தார்.

Advertisment
Advertisment

இதுபற்றி பேசிய விமானிகள், மோசமான வானிலை காரணமாக விமானம் இறங்கிய பின்னரும் பயணிகள் நீண்டநேரம் வெளியே அனுப்பப்படாமல் இருந்ததாகவும், அதே சமயம் அவர்கள் அனைவரும் எவ்வித பாதிப்புமின்றி நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.