'Let's put this as a status now'-WhatsApp is going to give a new update

Advertisment

அமெரிக்க செயலியான வாட்ஸ் அப், தகவல் பரிமாற்றத்திற்கான முக்கிய செயலியாக உள்ளது. உலகம் முழுவதும் 2 பில்லியனுக்கும் அதிகமானோர் வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்தி வரும் நிலையில், அடுத்தடுத்த அப்டேட்கள் மூலம் தன்னுடைய சேவையை வாட்ஸ்அப் மேம்படுத்தி வருகிறது. அந்த வகையில், ஒருவருக்கு அனுப்பிய மெசேஜை டெலிட் செய்யும் வசதி அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.

இதற்கு பயனாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்த நிலையில், தற்பொழுது புதிய அப்டேட் ஒன்றை வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே புகைப்படம், வீடியோவை ஸ்டேட்டஸாக வைக்கும் வசதி உள்ள நிலையில் குரல்பதிவையும் ஸ்டேட்டஸாக வைக்கும் வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் புதிய அப்டேட்டாக கொடுக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.