தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு இரவு நேர ஊரடங்கு - அதிரடி அறிவிப்பை வெளியிட்ட லெபனான்!

unvaccinated

மேற்காசிய நாடான லெபனான் நாட்டில், கரோனாபாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. இதனையடுத்துஅந்தநாடுவரும் 17 ஆம் தேதி முதல் ஜனவரி 9 ஆம்தேதி வரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்குஇரவு நேர ஊரடங்கைஅறிவித்துள்ளது. அதாவது 17 ஆம் தேதி முதல் ஜனவரி ஒன்பதாம் தேதி வரை, ஒரு டோஸ் தடுப்பூசி கூட செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு இரவு 7 மணியிலிருந்து காலை 6 மணிவரைவீடுகளில் இருந்து வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள்அந்த நேரத்தில் வெளிவர முயன்றால், 48 மணிநேரங்களுக்குள்செய்யப்பட்ட கரோனாபரிசோதனை சான்று வைத்திருக்க வேண்டும் எனவும் அந்தநாடு அறிவித்துள்ளது. மேலும்பாதுகாப்பு, ராணுவம், சுகாதாரம், கல்வி மற்றும் சுற்றுலா துறைகளில் பணியாற்றுபவர்கள் ஜனவரி 10 ஆம் தேதி தேதிக்குள் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும் என அந்தநாட்டுஅரசு உத்தரவிட்டுள்ளது.

ஒருவேளை அவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லையென்றால், வாரம் இரண்டு முறை சொந்த செலவில் கரோனாபரிசோதனை செய்துகொண்டுஅதற்கான சான்றைசமர்ப்பிக்க வேண்டும் எனவும் அந்தநாட்டுஅரசு அறிவித்துள்ளது.

lebanon night curfew vaccination
இதையும் படியுங்கள்
Subscribe