லெபனான் நாட்டை சேர்ந்த பத்திரிகை ஒன்று ஒரு வரியில் செய்தி வெளியிட்டது பலரையும் கவனிக்க வைத்துள்ளது.
லெபனான் நாட்டில் மோசமான அரசியல் சூழல் நிலவி வரும் நிலையில், மக்களுக்கு அரசியல் குறித்த விழிப்புணர்வையும், அந்நாட்டின் தற்போதைய நிலையையும் கொண்டு சேர்க்கும் வகையில் “தி டெய்லி ஸ்டார்” என்ற பத்திரிகை இப்படி செய்தி வெளியிட்டுள்ளது.
லெபனான் நாட்டில் நடக்கும் உள்நாட்டு அரசியல் பிரச்சனை, அரசின் செயல்படாத் தன்மை, பொதுக்கடன் அதிகரிப்பு, மோசமான பொருளாதார சூழ்நிலைகள், வேலையில்லா திண்டாட்டம், முறைகேடான ஆயுதப் பயன்பாடு மற்றும் அதிகபட்ச மாசுபாடு ஆகியவற்றை மேற்கோள்காட்டி இந்த செய்திங்களை வெளியிட்டுள்ளது. மேலும் அந்த செய்தித்தாளின் கடைசி பக்கத்தில் அந்நாட்டின் தேசியச் சின்னமான சிதார் மரத்தை அச்சிட்டு அதன் கீழ் “தாமதமாவதற்கு முன்பே விழித்துக் கொள்ளுங்கள்” என்று அச்சிடப்பட்டுள்ளது.
இது குறித்து "தி டெய்லி ஸ்டார்" நாளிதழின் தலைமை செய்தி ஆசிரியர் நதீம் லட்கி கூறுகையில், “நாடு சந்திக்கும் பிரச்சனைகளைகளையும், அதை உடனே சரி செய்ய வேண்டிய அவசியத்தையும் நாங்கள் அரசுக்கு ஒரு எச்சரிக்கை மணி அடித்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.