Leave the Ukrainian capital immediately Embassy instructs Indians

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே நடைபெற்றுவரும் போர் காரணமாக உக்ரைனில் அசாதாரண சூழல் நிலவுகிறது. தொடர்ந்து, ஆறாவது நாளாக தாக்குதல் நடத்திவரும் ரஷ்யா, பல முக்கிய நகரங்களைக் கைப்பற்றி தலைநகர் கீவ்-வை நோக்கி முன்னேறிவருகிறது. உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் ஆப்ரேஷன் கங்கா மூலம் தாயகம் அழைத்துவரப்படும் நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ்-வில் உள்ள இந்தியர்கள் உடனடியாக அந்த நகரத்தைவிட்டு வெளியேறுமாறு இந்தியத்தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

Advertisment

இது தொடர்பாக இந்தியத்தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மாணவர்கள் உட்பட அனைத்து இந்தியர்களும் கீவ்-வில் இருந்து ரயில்கள் அல்லது வாய்ப்புள்ள பிற வழிகளை பயன்படுத்தி உடனடியாக இன்றே வெளியேறுங்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தலைநகர் கீவ்-வை ரஷ்யா நெருங்கிவருவதால் இந்த அறிவிப்பை இந்தியத்தூதரகம் வெளியிட்டுள்ளது.