இலங்கையில் இளைஞர் பட்டாளம் நடத்திய பட்டம் விடும் நிகழ்வு விபரீதத்தில் முடிந்தது.
இலங்கையில் பட்டம் பறக்கவிட்ட நபர் வான்நோக்கி தூக்கிச் செல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பருத்தித்துறை அருகே உள்ள பகுதியில் இளைஞர்கள் சிலர் பெரிய அளவிலான பட்டம் ஒன்றை வானில் பறக்கவிட்டனர். அப்போது பட்டம் வானத்தை நோக்கிப் பறந்த நிலையில், கயிறைப் பிடித்த இளைஞரும் எதிர்பாராத விதமாக மேலே தூக்கிச் செல்லப்பட்டார்.
அருகில் இருந்த மற்ற இளைஞர்கள் கீழே குதிக்குமாறு அந்த இளைஞரை நோக்கிக் கூச்சலிட்டனர். 40 அடி உயரம்வரை பறந்த அந்த இளைஞர், சில நிமிடங்களுக்குப் பிறகு கீழே குதித்தார். அவர் லேசான காயத்துடன் உயிர் பிழைத்தார்.
இந்த வீடியோ ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.