வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகச் செய்திகள் வெளியான நிலையில், இதுகுறித்து தென்கொரியா விளக்கமளித்துள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ddfgdf_2.jpg)
வடகொரிய அதிபரான கிம் ஜாங் உன் உடல்பருமன் மற்றும் புகைபிடித்தலால் இருதய நோய்க்கு ஆளாகி, அதன் காரணமாகச் சமீபத்தில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. மேலும், அறுவைசிகிச்சைக்குப் பின்னர் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அமெரிக்க ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. வடகொரியாவுக்கான அமெரிக்க அதிகாரிகள் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் இந்தச் செய்திகளை அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்டன.
இந்நிலையில் கின் ஜாங் உன் உடல்நிலை குறித்து வெளியான தகவல்களில் உண்மை இல்லை எனத் தென்கொரியா தெரிவித்துள்ளது. மேலும், வடகொரியச் செய்திகளைச் சேகரித்துவெளியிடும் தென்கொரியச் செய்தி நிறுவனம் ஒன்று, கிம் ஜாங் உன் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும் இப்போது அவர் ஓய்வெடுத்து வருவதாகவும் தெரிவித்து உள்ளது. இந்த நிலையில் வடகொரிய அதிபரின் உடல்நிலை குறித்து அனைத்து கூறுகளையும் அமெரிக்கா கண்காணித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)