kim jong un appears in a meeting at north korea

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை குறித்து வதந்திகள் பரவிவந்த நிலையில், அதிகாரிகள் அளவிலான கூட்டம் ஒன்றில் அவர் பங்கேற்ற புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Advertisment

வடகொரிய அதிபரான கிம் ஜாங் உன் உடல்பருமன் மற்றும் புகைபிடித்தலால் இருதய நோய்க்கு ஆளாகி, அதன் காரணமாகக் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவருக்கு அறுவைசிகிச்சை செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. மேலும், அறுவைசிகிச்சைக்குப் பின்னர் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், இதனை மறுக்கும் வகையில் கிம் ஜாங் உன்னின் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டது வடகொரியா. இதனைத் தொடர்ந்து கிம் ஜாங் உன்னின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன.

Advertisment

அந்த வகையில், கடந்த சில வாரங்களாக, கிம் ஜாங் உன் கோமா நிலையில் உள்ளார், அவர் இறந்துவிட்டார், தனது தங்கைக்கு அதிகாரத்தை வழங்கிவிட்டார் எனப் பல தகவல்கள் சமூக ஊடகங்களில் பரவ ஆரம்பித்தன. இந்நிலையில், இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கூட்டம் ஒன்றில் கிம் ஜாங் உன் பங்கேற்ற புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வார இறுதியில் வடகொரியாவைத் தாக்க இருக்கும் புயல் குறித்தும், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் ஆலோசிப்பதற்காக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கிம் ஜாங் உன் பங்கேற்று, அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.