அதிக அளவு ஒட்டகங்கள் தண்ணீர் குடிப்பதால் 10,000 ஒட்டகங்களை கொல்ல ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவின் தெற்கு பகுதியில் ஒட்டகங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வண்ணம் இருக்கிறது. இது அந்நாட்டு அரசுக்கு தற்போது பிரச்சனையாக மாறியுள்ளது. ஏனெனில் ஒட்டகங்கள் அதிகமாக தண்ணீர் குடிப்பதால் நாட்டில் தண்ணீர் பிரச்சனை ஏற்படுவதாக ஆஸ்திரேலிய அரசு கருதுகிறது.
மேலும் ஒட்டகங்கள் அளவுக்கு அதிகமாக மீத்தேன் வாய்வை வெளியிடுவதால் வெப்பநிலை அதிகரிப்பதாகவும் அந்நாட்டு அரசு கவலைப்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அரசின் இந்த முடிவுக்கு விலங்கின ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். துப்பாக்கி சுடும் வீர்ரகளை கொண்டு ஒட்டகங்கள் சுடப்படும் என்று கூறப்படுகின்றது.