தேவாலயத்தில் தன்னை ஆசீர்வதித்த பாதிரியாருக்குக் குழந்தை ஒன்று ஹைஃபைவ் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஒரு தாயும் அவரது குழந்தையும் தேவாலயத்தில் ஜெபம் செய்துவிட்டு பாதிரியாரிடம் ஆசீர்வாதம் வாங்குகின்றனர். அப்போது பாதிரியார், ஜெபம் சொல்லி அந்தச் சிறுமியை ஆசீர்வதிக்க தனது கைகளை உயர்த்துகிறார். இதனைப் பார்த்த அந்த குழந்தை, பாதிரியார் ஹைஃபைவ் கொடுக்கிறார் என நினைத்து, அவரின் கையில் தட்டுகிறது. இதையறிந்த அந்த பாதிரியார் சிரிப்பை அடக்க முடியாமல் வாயில் கையை வைத்தபடி, சிரித்துக் கொண்டே அந்தக் குழந்தையை ஆசீர்வதிக்கிறார். இந்தக் காட்சியை அங்கிருந்த ஒரு நபர், வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.