Skip to main content

இந்தியா திரும்பிய பின் லாட்டரி அடித்த கதை!!! 

Published on 05/07/2018 | Edited on 05/07/2018
tojo

 

 



அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் இந்தியாவுக்கு திரும்ப விமானம் ஏறப்போகும் தருவாயில் லாட்டரி டிக்கெட் வாங்கியவருக்கு 7 மில்லியன் திர்ஹாம் பரிசு கிடைத்திருக்கிறது.

 

டோஜோ மேத்திவ் என்ற 30 வயது கேரளாவைச் சேர்ந்த இளைஞர் அபுதாபியில் சூப்பர்வைசராக வேலைபுரிந்துவருகிறார். இவர் தன்னுடைய மனைவிக்கு டெல்லியில் வேலை கிடைத்திருப்பதால் இந்தியா வர இருந்துள்ளார். அதற்காக அபுதாபி விமானநிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு பிக் டிக்கெட் என்ற  லாட்டரி டிக்கெட்டை வாங்கியுள்ளார். கடந்த செவ்வாய்கிழமை அன்று பிக் டிக்கெட் வலைதளத்தில் லாட்டரி விழுந்துள்ளதா என்று தனது நண்பர்களுடன் பார்த்துள்ளார். அப்போது இவர் வாங்கிய டிக்கெட்டின் எண் அதில் இருக்க, இவருக்கு பரிசுத்தொகையாக சுமார் 7 மில்லியன் திர்ஹாம் விழுந்துள்ளதாக இருந்துள்ளது. 7 மில்லியன் திர்ஹாம் என்றால் இந்திய மதிப்பில் சுமார் 13கோடி ரூபாய். 

 

 

 

கேரளாவில் சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்பதுதான் என்னுடைய லட்சியம். தற்போது அது அதிகபட்ச தொகை மூலம் நிஜமாகியுள்ளது என்று டோஜோ தெரிவித்துள்ளார்.

 

செவ்வாய்க்கிழமை விழுந்த லாட்டரியில் மேலும் ஒன்பது பேருக்கு 100,000 திர்ஹாம்ஸ் பரிசு தொகை விழுந்துள்ளது. அதில் 5 இந்தியர்கள், ஒரு பாகிஸ்தானியர் மற்றும் குவைத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் லாட்டரி அடித்துள்ளது.                

 

 

 

 

 

  

சார்ந்த செய்திகள்