Advertisment

கேரள வாலிபருக்கு அடித்த ஜாக்பாட்; ஒரே லாட்டரி சீட்டால் மாறிய வாழ்க்கை

gfhgf

கேரளாவைச் சேர்ந்த சரத் புருஷோத்தமன் என்ற இளைஞர் வளைகுடா நாடான அபுதாபியில் வேலை செய்து வருகிறார். கடந்த பல ஆண்டுகளாக லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் கொண்ட இவருக்கு இந்த புத்தாண்டு மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை கொடுத்துள்ளது என்றே சொல்லலாம். புத்தாண்டையொட்டி அபுதாபி விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சிறப்பு லாட்டரி குலுக்களில் இவருக்கு முதல் பரிசாக 28 கோடி ரூபாய் விழுந்துள்ளது. கேரளா மாநிலத்தவர் அதிகம் வேலை செய்யும் அபுதாபியில் அடிக்கடி கேரளாவினர் லாட்டரி வெல்வது இயல்பு, ஆனால் இவ்வளவு பெரிய தொகையை இதுவரை யாரும் பரிசாக பெற்றதில்லையாம். இதில் மொத்தத்தில் லாட்டரி வென்ற 10 பேரில் 8 பேர் இந்தியர்கள். 8 இந்தியர்களில் 6 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் பரிசு வென்றதை நம்ப மறுத்த அவர், சிறிது நேரத்திற்கு பின்னரே அதிர்ச்சியுடன் அதனை நம்பியுள்ளார்.

Advertisment

abudhabi Kerala lottery
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe