Skip to main content

ஒரே நாளில் 22 கோடி ரூபாய்க்கு அதிபதியான இந்திய இளம் பெண்...

Published on 09/07/2019 | Edited on 09/07/2019

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த லாட்டரி குலுக்களில் இந்தியாவை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு இந்திய மதிப்பில் 22 கோடி ரூபாய் பரிசாக விழுந்துள்ளது.

 

kerela woman wins 22 crore rupees in abu dhabi lottery

 

 

அபுதாபியில் குடும்பத்துடன் தங்கி பணிபுரிந்து வரும் கேரளாவின் கொல்லம் பகுதியை சேர்ந்த சொப்னா நாயர் என்ற பெண் கடந்த மாதத்தில் லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார். இதற்கான குலுக்கள் தற்போது நடந்த நிலையில், முதல் பரிசான 22 கோடி ரூபாயை அவர் வென்றுள்ளதாக அவருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தலை கால் புரியாத அளவு மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார் சொப்னா.

இது குறித்து பேசியுள்ள அவர், "நான் பொதுவாக லாட்டரி சீட்டு வாங்க மாட்டேன். இதுவரை மொத்தமாகவே மூன்று அல்லது நான்கு முறைதான் வாங்கியிருப்பேன். இப்போது கூட நான் இந்த லாட்டரி சீட்டை வாங்கியதை மறந்துவிட்டேன். பரிசு குறித்து அழைப்பு வந்த பின்னரே ஞாபகம் வந்தது. நான் இந்த லாட்டரி சீட்டை வாங்கியது என் கணவருக்கு கூட தெரியாது. பரிசு விழுந்ததை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். என் கணவரிடம் தெரிவித்ததும் அதிர்ச்சி அடைந்தார். மேலும் இந்த பணத்தை எங்கள் சேமிப்பு போக மீதமுள்ளதை பெண்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் நலனுக்காக பயன்படுத்த நாங்கள் முடிவெடுத்துள்ளோம்" என கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அபுதாபியில் முதல் இந்து கோவில்; பிரதமர் மோடி திறந்து வைத்து வழிபாடு

Published on 14/02/2024 | Edited on 14/02/2024
First Hindu temple in Abu Dhabi and Worship by Prime Minister Modi

பிரதமர் மோடி இரண்டு நாள் அரசுப் பயணமாக நேற்று (13-02-24) ஐக்கிய அரபு அமீரகம் (அபுதாபி) சென்றார். டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு அவர் அபுதாபிக்கு சென்றார். அங்கு அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து, பிரதமர் மோடி அந்த நாட்டு அதிபர் முகமது பின் சயீத் உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்துப் பேசினார்.  

அதன் பின்பு, இன்று (14-02-24) மதியம் அங்கு நடைபெறும் உலக உச்சி மாநாட்டில் கவுரவ விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார். இதனையடுத்து, இன்று  மாலை பி.ஏ.பி.எஸ். அமைப்பு சார்பில் பல்வேறு வசதிகளுடன் 27 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட இந்து கோவில் மற்றும் அதன் வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். மேலும், கோவிலுக்குள் சென்று கட்டுமானங்களை பார்வையிட்டு அங்கு நடைபெறும் பூஜையிலும் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினார். இதன் பிறகு, மஹந்த் சுவாமி மகராஜ் சிறப்பு பூஜைகள் செய்து நாட்டிற்கு அர்ப்பணித்தார். அதற்கு முன்னதாக, அபுதாபி இந்து கோவிலில் காலையில் சாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. 

அபுதாபி சுவாமி நாராயண் கோவில் வட இந்தியர்களின் நாகரா பாணியில் கட்டப்பட்டிருந்தாலும், இந்தியா-ஐக்கிய அரபு அமீரகத்தின் கலையை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு பிரதமர் மோடி, அபுதாபிக்கு சென்றிருந்தபோது அதிபர் முகமது பின் சயீத், அபுதாபியில் இந்து கோவிலைக் கட்ட 13.5 ஏக்கர் நிலத்தை தானமாகக் கொடுத்தார். இத்துடன், கூடுதலாக 13.5 ஏக்கர் நிலத்தை அரபு எமிரேட்ஸ் அரசாங்கம் கடந்த 2019 ஆம் ஆண்டு தானமாகக் கொடுத்தது. இதையடுத்து, மொத்தம் 27 ஏக்கர் நில பரப்பளவில் சுவாமி நாராயண் கோவில் என்ற இந்து கோவிலைக் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

கேரளா லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் மீது வழக்குப் பதிவு

Published on 04/07/2023 | Edited on 04/07/2023

 

 A case has been registered against a teenager who was involved in selling Kerala lottery tickets

 

ஈரோடு மாவட்டத்தில் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவிட்டார். அதன் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு பவானியில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 11 பேர் கொண்ட கும்பல் பிடிபட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு கருங்கல்பாளையத்தில் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுகிறதா என்று போலீசார் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர்.

 

இந்நிலையில் நேற்று ஈரோடு மாணிக்கம் ஹவுசிங் யூனிட் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தியபோது சாய்ராம் (35) என்பவர் கேரளா லாட்டரி சீட்டுகளை வெள்ளைத் தாளில் எழுதி பரிசு விழும் என்று ஆசை வார்த்தைக் கூறி லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் சாய்ராம் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.