ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த லாட்டரி குலுக்களில் இந்தியாவை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு இந்திய மதிப்பில் 22 கோடி ரூபாய் பரிசாக விழுந்துள்ளது.

Advertisment

kerela woman wins 22 crore rupees in abu dhabi lottery

Advertisment

அபுதாபியில் குடும்பத்துடன் தங்கி பணிபுரிந்து வரும் கேரளாவின் கொல்லம் பகுதியை சேர்ந்த சொப்னா நாயர் என்ற பெண் கடந்த மாதத்தில் லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார். இதற்கான குலுக்கள் தற்போது நடந்த நிலையில், முதல் பரிசான 22 கோடி ரூபாயை அவர் வென்றுள்ளதாக அவருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தலை கால் புரியாத அளவு மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார் சொப்னா.

இது குறித்து பேசியுள்ள அவர், "நான் பொதுவாக லாட்டரி சீட்டு வாங்க மாட்டேன். இதுவரை மொத்தமாகவே மூன்று அல்லது நான்கு முறைதான் வாங்கியிருப்பேன். இப்போது கூட நான் இந்த லாட்டரி சீட்டை வாங்கியதை மறந்துவிட்டேன். பரிசு குறித்து அழைப்பு வந்த பின்னரே ஞாபகம் வந்தது. நான் இந்த லாட்டரி சீட்டைவாங்கியது என் கணவருக்கு கூட தெரியாது. பரிசு விழுந்ததை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். என் கணவரிடம் தெரிவித்ததும் அதிர்ச்சி அடைந்தார். மேலும் இந்த பணத்தை எங்கள் சேமிப்பு போக மீதமுள்ளதை பெண்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் நலனுக்காக பயன்படுத்த நாங்கள் முடிவெடுத்துள்ளோம்" என கூறியுள்ளார்.