திருட்டுத்தனமாக விமானத்தின் கியர் பாக்சில் ஒளிந்துகொண்டு சென்ற நபர், விமானம் நடுவானில் பறந்துகொண்டிருக்கும் போது கீழே விழுந்து பலியாகியுள்ளார்.

Advertisment

kenyan man travelled in flight without taking tickets

கென்யா நாட்டின் நைரோபி நகரிலிருந்து லண்டனுக்கு, கென்யா ஏர்வேஸ் நிறுவனத்திற்கு செந்தமான விமானம் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த விமானம் லண்டன் வான்பரப்புக்குள் பயணம் செய்த போது, கிளாபம் பகுதி அருகே திடீரென விமானத்திலிருந்து ஒரு நபர் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் தோட்டத்தில் விழுந்துள்ளார்.

Advertisment

விழுந்த வேகத்தில் உயிரிழந்த அவர், ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்த அந்த வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சியடைந்து காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார்.

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையின் போது, விமானத்தின் தரையிறங்கும் கியர் பெட்டிக்குள் ஒரு பை மற்றும் அதனுடன் தண்ணீர் மற்றும் உணவு ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இதன் மூலம் அவர் விமானத்தில் ஒளிந்துகொண்டு கென்யாவிலிருந்து லண்டன் வர திட்டமிட்டு இவ்வாறு செய்திருக்கலாம் என்றும், அப்படி ஒளிந்து வரும்போது கீழே விழுந்து இறந்திருப்பார் என்றும் தெரிவித்தனர்.

Advertisment

ஆனால் அவர் எப்படி விமானத்தின் அந்த பகுதியை அடைந்திருப்பார் என்பது குறித்து கண்டறிய முடியவில்லை என தெரிவித்தனர். மேலும் இறந்தவரை அடையாளம் காண உதவுமாறு கென்யா உயர் அதிகாரிகளை லண்டன் காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.