Skip to main content

கஜகஸ்தானில் 100 பேருடன் புறப்பட்ட விமானம் விபத்து!

Published on 27/12/2019 | Edited on 27/12/2019

கஜகஸ்தான் நாட்டின் அல்மட்டி விமான நிலையத்தில் இருந்து 100 பயணிகளுடன் புறப்பட்ட பெக் ஆர் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அருகில் இருந்த 2 மாடி கட்டடத்தின் மோதி விபத்துக்குள்ளானது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு ராணுவத்தினர் விரைந்துள்ளனர்.

KAZAKHSTAN ALMETY AIRPORT FLIGT INCIDENT


மேலும் இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்ததாகவும், பலர் உயிரோடு இருக்கலாம் என்ற முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் விமான ஊழியர்களையும், பயணிகளையும் மீட்கும் முயற்சியில் அந்நாட்டு ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். 




 

சார்ந்த செய்திகள்

Next Story

கரோனாவை விடக் கொடிய 'நிமோனியா' பரவல்... சீனாவின் எச்சரிக்கை... கஜகஸ்தானின் மறுப்பு...

Published on 11/07/2020 | Edited on 11/07/2020

 

kazakhstan refuses china's pneumonia claim

 

ஜூன் மாதத்தில் நிமோனியாவால் 600க்கும் மேற்பட்டோர் இறந்ததை அடுத்து மத்திய ஆசிய நாடு முழுவதும் அறியப்படாத 'நிமோனியா' பரவுவதாக கஜகஸ்தானில் உள்ள சீனத் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

சீனாவின் வுஹான் நகரில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் உலகம் முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமான மக்களைப் பாதித்துள்ளது. இதன் தாக்கம் உலகம் முழுவதும் நாளுக்குநாள் அதிகரித்து வரும் சூழலில், கரோனாவை விடக் கொடிய நிமோனியா ஒன்று மத்திய ஆசிய நாடுகளில் பரவி வருவதாகச் சீனா எச்சரித்துள்ளது. கஜகஸ்தானில் இந்த "அறியப்படாத நிமோனியா" காரணமாகக் கடந்த ஆறு மாதங்களில் சீனக் குடிமக்கள் உட்பட 1,772 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஜூன் மாதத்தில் மட்டும் 628 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

 

கரோனாவை விட இறப்பு வீதம் அதிகமாக இருக்கும் இந்த நிமோனியாவில் இருந்து சீன மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கஜகஸ்தானில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், சீன அரசு ஊடகங்களின்படி, நிமோனியாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டவர்களை விட இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகம் என்று கஜகஸ்தானின் சுகாதார அமைச்சர் கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஆனால் இதனை மறுத்துள்ள கஜகஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சர், சீன அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கை "உண்மை அல்ல" என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்ட கஜகஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சகம், "வகைப்படுத்தப்படாத நிமோனியா" இருப்பதை ஒப்புக் கொள்வதாகவும், ஆனால் சீனத் தூதரகம் வழங்கிய எச்சரிக்கை உண்மைக்கு மாறாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. 

 

 

Next Story

உக்ரைன் நாட்டு விமானத்தை சுட்டது ஈரான்தான்! உலக நாடுகள் அதிர்ச்சி!

Published on 11/01/2020 | Edited on 11/01/2020

கடந்த புதன்கிழமை ஈரான் தலைநகர் டெஹ்ரானிலிருந்து புறப்பட்ட உக்ரைன் நாட்டு பயணிகள் விமானம் விபத்துக்குள்ளாகி 176 பேர் பலியானார்கள். இராக்கில் இருக்கும் அமெரிக்க ராணுவ முகாம்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி 80 பேர் பலியான சில மணி நேரத்தில் இந்த விபத்து நடந்தது.

இது விபத்து என்று ஈரான் சொல்லிவந்த நிலையில், அமெரிக்காவும் உக்ரைனும் ஈரான்தான் சுட்டு வீழ்த்தியிருக்க வேண்டும் என்று குற்றம்சாட்டின. ஈரான் தெரியாமல்தான் சுட்டு வீழ்த்தியிருக்க வேண்டும் என்றுதான் அவை கூறின. அதையும் ஈரான் மறுத்தது.

IRAN

ஆனால், சனிக்கிழமை காலை, உக்ரைன் விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்தியது உண்மைதான் என்று ஈரான் ஒப்புக்கொண்டிருக்கிறது.
 

ஈராக்கில் அமெரிக்க ராணுவ முகாம்களை தாக்கிய சிறிது நேரத்தில் ஈரானிய புரட்சிகரப்படை முகாமை நோக்கி இந்த விமானம் வந்ததால் சந்தேகப்பட்டு, சுட்டுவீழ்த்தியதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது.

 

ஈரான் மீதான் அமெரிக்காவின் தாக்குதலுக்கு எதிராக உலக நாடுகளில் கருத்து உருவாகும் நிலையில் ஈரான் ராணுவத்தின் முட்டாள்தனமான இந்த நடவடிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.