tggf

Advertisment

2020-ம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் ட்ரம்ப்பை எதிர்த்து கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக போட்டியிடவுள்ளார். ஜனநாயக கட்சியை சேர்ந்த கமலா தொடர்ந்து டிரம்ப்பையும் அவரது செயல்பாடுகளையும் விமர்சித்து வந்தார். இதற்கு முன் கலிபோர்னியா மாகாண அட்டர்னி ஜெனரலாக இருந்த கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சி சார்பில் கலிபோர்னியா செனட் உறுப்பினர் தேர்தலில்போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கபட்ட கமலா ஹாரிஸ் இது தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில், 'அமெரிக்காவின் எதிர்காலம், மற்றும் மக்களின் உரிமைகளுக்கான குரலை உயர்த்திப் பிடிப்பதில் உள்ளது. எனவேதான் நான் அமெரிக்க அதிபருக்கான போட்டியில் இருக்கிறேன்' என கமலா ஹாரீஸ் கூறியுள்ளார். கமலா ஹாரிஸ் தாயார் ஷ்யாமளா கோபாலன் சென்னையிலிருந்து அமெரிக்கா சென்று குடியேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.