தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞரின் 4ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் வகையில் அக்கட்சியினர் தமிழகம் முழுவதும் அமைதி ஊர்வலம் சென்று கலைஞர் உருவ படத்திற்கும், சிலைக்கும் மலர் மரியாதை செலுத்தினர்.
அந்த வகையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நான்காம் ஆண்டு நினைவு நாள்ஒன்றுகூடல் கத்தாரில் உள்ள ஹோட்டல் சாலிமாரில்நடைபெற்றது. இந்நிகழ்ச்சி கத்தார் அயலக அணியின் சதக்கத்துல்லா தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் உலகம் பேசும் மகத்தான தலைவர் கலைஞர் அவர்களின் நினைவஞ்சலியைப் போற்றிப் புகழ் பாடி கொண்டாடி மகிழ்ந்தனர். இதில் கத்தார் அயலக அணி துணைப் பொறுப்பாளர் மதன்குமார் முன்னிலையில் ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்வை வரவேற்று செயலாளர் அப்துல் ரசீது தொகுத்து வழங்கினார்.
பூபதி மனோ கௌதம், மதன்குமார் மற்றும் திமுக உறுப்பினர்கள் மற்றும் தோழமை கட்சிகளின் பிரமுகர்களும் பொது நல ஆர்வலர்களும்கலைஞர் அவர்களின் புகழை போற்றிஅஞ்சலி செலுத்தினர்.
Follow Us