/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-20_19.jpg)
உலக புகழ்பெற்ற மீம்ஸ் நாயாகப் பலரின் கவனத்தைப் பெற்ற கபோசு உடல்நலக்குறைவால் உயிரிழந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு இந்த நாயை ஜப்பானைச் சேர்ந்த ஒருவர் தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார். அப்போது, 2010 ஆம் ஆண்டு கபோசு நாயை வைத்து விதவிதமாக போட்டோ ஷூட் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டது. இந்தப் புகைப்படம் இணையதளவாசிகளை வெகுவாக கவர்ந்தது மட்டுமல்லாமல், அந்தக் கபோசு நாயின் ரியாக்ஸன்கள் அனைத்தும் உலகம் முழுவதும் மீம் டெம்ப்லேட்டுகளாக மாறி பலரையும் ரசிக்கும்படி வைத்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-22_7.jpg)
இதனைத் தொடர்ந்து, கடந்த 2013ஆம் ஆண்டில் கபோசுவின் புகைப்படத்தைப் பயன்படுத்தி கிரிப்டோகரன்சியான Dogecoin ஐ உருவாக்கவும் தூண்டியது. மேலும் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை தன் வசப்படுத்திய பிறகு அதன் குருவி லோகோவை மாற்றி கபோசுவின் புகைப்படத்தை வைத்தார். பின்னர்தான் ட்விட்டர் எக்ஸ் நிறுவனமாக மாறியதும் வேறு புகைப்படம் மாற்றப்பட்டது.
இந்த நிலையில்தான் நேற்று(24.5.2024) காலை உடல்நலக்குறைவால் தன்னுடைய 18 வயதில் கபோசு நாய் உயிரிழந்துள்ளது. கபோசு நாய் உயிரிழந்தது உலகம் முழுவதும் உள்ள அதன் ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)