ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் தங்களது இடைக்கால அரசை நிறுவி ஆட்சி செய்து வருகின்றனர். அதேசமயம் ஆப்கானிஸ்தான் கடுமையான உணவுப் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஐஎஸ் ஐஎஸ்தீவிரவாத இயக்கத்தின் உள்ளூர் பிரிவான ஐஎஸ்-கே தீவிரவாதிகளின் அச்சுறுத்தலையும்எதிர்கொண்டு வருகிறது. அவர்கள் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதலைநிகழ்த்திவருகிறார்கள்.
இந்தச்சூழலில்கடந்த வியாழன் அன்றுஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மின்கம்பத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலினால் அண்டை நாட்டிலிருந்து காபூலுக்கு மின்சாரம் கொண்டுவரும்மின் இணைப்புகள் உருக்குலைந்தன. இதனால் காபூல் நகரமே இருளில் மூழ்கியது. இந்தநிலையில்இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்-கே தீவிரவாத அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நாடு, உஸ்பெகிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து அதிகமாக மின்சாரத்தைப் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.